குழந்தை திருமணம்… சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கைது..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோயிலில் 8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தீட்சிதர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் குழந்தை திருமணம் என்பது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்த பாடில்லை.

விண்ணை முட்டும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமி ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தாக தீட்சிதர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் சிறுமியின் பெற்றோர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தீட்சிதர் சூர்யா என்பவரை காவல்துறையின் கைது செய்துள்ளனர்.

பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி: முதல்வர் புஷ்கர் சிங் இரங்கல்..!!

அதே சமயம் சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், இதே போன்று சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக 3 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment