Connect with us

தமிழகத்தில் 89.52% பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு !!

buses 1200

Tamil Nadu

தமிழகத்தில் 89.52% பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு !!

தமிழகத்தில் 89.52% பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு !!

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் 89.52% பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம்  தெரிவித்துள்ளது.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும் இன்றும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் நேற்று தமிழகத்தின் 39% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இன்று 60% பேருந்துகள் ஓடும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 89.52 சதவீதம் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே சென்னை மாநகரில் அதிகாலையில் 64% பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 98% பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கும்பகோணம், மதுரை, நெல்லை ஆகிய 8 கோட்டங்களை உள்ளடக்கி இன்று 89.52 சதவீதம் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை ஓரளவு  பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top