இயற்கை பேரழிவு: கடந்தாண்டு 87 பில்லியன் டாலர் இழப்பு; இந்தாண்டு எவ்வளவு வரும்?

இந்தியாவில் தற்போது இயற்கை பேரழிவு அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்து உலக வானிலை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இந்தியா 87 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்புகளை சந்தித்தது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது. இயற்கை பேரழிவு

ஐ.நா சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்காட்லாந்தில் தொடங்கவுள்ள நிலையில் உலக வானிலை அமைப்பு இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசியாவில் கடந்தாண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிப்பை அடைந்துள்ளன என்றும் கூறியது.

ஆசியாவில் அதிகமாக சீனா 238 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது. கடந்த ஆண்டு தான் ஆசியாவிலேயே வெப்பமான ஆண்டாக இருந்தது என்றும் கூறியது.

1981 முதல் 2010 வரை இருந்த வெப்பநிலையை விட 1.38 டிகிரி செல்சியஸ் கடந்தாண்டு வெப்பம் அதிகம் என்றும் உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது. கடந்தாண்டு 87 பில்லியன் டாலர் இழப்பு உள்ள நிலையில் இந்த ஆண்டும் இந்தியாவில் பெரும் இயற்கை பேரழிவு நிகழ்ந்து கொண்டே வருகிறது என்பது நம் கண்முன்னே தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment