News
850 லிட்டர் ஃபாரின் சரக்கை கைப்பற்றிய கலால் துறை

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவித்து வரும் நிலையில் ஒருசில மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறது.
இருப்பினும் வெளிநாட்டு மதுவகைகளும், உள்ளூரில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயமும் அவ்வப்போது கலால் துறை அதிகாரிகளால் பிடிபட்டு வருவது தெரிந்ததே
அந்த வகையில் இன்று மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாக்டோக்ரா காவல்துறையினர் உதவியுடன் கலால்துறை அதிகாரிகள் சுமார் 1050 லிட்டர் அனுமதியில்லாத மதுவகைகளை கைப்பற்றியுள்ளனர். இவற்றில் 850 லிட்டர் மது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் 200 லிட்டர் உள்ளூரில் காய்ச்சப்பட்ட சாராயம் என்றும் கூறப்படுகிறது.
