மாண்டஸ் புயலால் 85 கிமீ வேகத்தில் சூறைக்காற்று: வானிலை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள மான்டஸ் புயல் தீவிரமடைந்து நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது ’மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் கரையை கடக்கும்போது 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறி என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தென்கிழக்கில் 550 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் கரையை கடக்கும் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லும் புயலால் ஏற்பட்ட சேதத்தை உடனடியாக சரி செய்ய மீட்புப்படையினர் தயாராக உள்ளனர் என்றும் மரம் அல்லது மின்கம்பங்கள் விழுந்திருந்தால் உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.