மாவட்ட வாரியாக ஏரிகளின் நிலவரம்: தமிழ்நாட்டில் 8439 பாசன ஏரிகள் 100% நிரம்பின!

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அணைகள் ஏரிகள் என அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டியது. தமிழ்நாட்டில் 8439 பாசன ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

chembarappakam lake

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 132 ஏரிகளில் இதுவரை 8 ஆயிரத்து 439 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளன. தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 382 ஏரிகள் முழு கொள்ளளவில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை தகவல் அளித்துள்ளது.

1288 ஏரிகள் கொள்ளளவில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி வருகின்றன என்றும் கூறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2040 பாசன ஏரிகளில் இதுவரை 570 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் 1460 ஏரிகளில் இதுவரை 527 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி 100% நிரம்பியுள்ளன. மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1340 பாசன ஏரிகளில் இதுவரை 741 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1131 பாசன ஏரிகளில் இதுவரை 624 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 697 ஏரிகளில் அதிகபட்சமாக 691 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் 56 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 26 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 566 ஏரிகள், கோவை மாவட்டத்தில் 17 ஏரிகள், கடலூர் மாவட்டத்தில் 194 ஏரிகள், தர்மபுரி மாவட்டத்தில் 12 ஏரிகள், ஈரோடு மாவட்டத்தில் 11 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 104 ஏரிகள் நிரம்பி உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 335 ஏரிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஏரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 218 ஏரிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 319 ஏரிகள் ,சேலம் மாவட்டத்தில் 78 தஞ்சாவூர் மாவட்டத்தில் 458 ஏரிகள் நிரம்பி உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment