உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையப்படுத்திய83 படத்துக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

கடந்த 1983ம்  ஆண்டு  நடந்த உலக கோப்பை போட்டியில்தான் கபில்தேவ் தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீசுடன் மோதி உலககோப்பையை வென்றது.

அதன் பிறகு ஒருமுறை உலககோப்பையை தோனி தலைமையிலான இந்தியப்படை வென்றாலும் முதன் முதலில் வென்ற அந்த பசுமை மிகு நினைவுகள் மிக மறக்க முடியாதவை.

சமீபத்தில் அந்த தருணங்களையும் அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களையும் மையப்படுத்தி 83 என்ற படம் வெளியானது.

இந்த படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடித்திருந்தார். தமிழக நடிகர் ஜீவாவும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அந்த வெற்றி அந்த சிறுவனுக்கு உத்வேகம் அளித்தது என தன்னை பற்றி குறிப்பிட்டு படக்குழுவினருக்கும் ரன் வீர் சிங்குக்கும் பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment