
Tamil Nadu
கஞ்சா வழக்கு-ஒரே நாளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.!!
நம் தமிழகத்தில் மறைமுகமாக கஞ்சா பொருட்கள் விற்பனை ஆனது ஆங்காங்கே அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் பல இடங்களில் கஞ்சா விற்பனைக்கு பணம் பரிவர்த்தனை ஆனது வங்கிகளில் செலுத்தப்படுவதாக தெரிகிறது.
இதனை அறிந்து தற்போது சில வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் கஞ்சா வழக்கு தொடர்பாக 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சுமார் 494 கஞ்சா வழக்குகள் உள்ளது.
இந்த வழக்குகளில் தொடர்புடைய சுமார் 813 வங்கி கணக்கு முடக்கப்பட்டது. விருதுநகரில் 76 வழக்குகளில் தொடர்புடைய 119 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் 76 வழக்குகளில் தொடர்புடைய 116 வங்கி கணக்குகள் மூடப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படும் என்று ஐஜி அஸ்ரா கூறியுள்ளார்.
