
தமிழகம்
அதிர்ச்சியில் வடிவேலு!! வாங்கிய ஒரே நாளில் பழுதான 80 ஆயிரம் ரூபாய் எல்.ஜி டிவி;;
சேலத்தில் ஒரே நாளில் 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எல்.ஜி டிவி பழுதான நிலையில் 88 ஆயிரம் பணம் மற்றும் நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த கண்ணன் சேரி பகுதியை சேர்ந்த வடிவேலு 88 ஆயிரம் மதிப்புள்ள 65 இன்ஞ் எல்.ஜி டிவியை வாங்கியுள்ளார். வாங்கிய மறுநாளே டி.வி பழுதான நிலையில் அதிர்ச்சி அடைந்த வடிவேலு மாற்று டி.வி வழங்குமாறு விற்பனை நிலையத்தில் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் ஒரு வருடமாக அழை கழித்தாக கூறப்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி விற்பனை நிலையத்தின் மீது வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணையை தொடங்கிய நிலையில் பலமுறை விற்பனை அலுவலக அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியும் ஆஜராகாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி டிவிக்கு உரிய 88 ஆயிரம் ரூபாய் மற்றும் நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இவற்றை 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
