தற்போது அனைவரின் மனதிலும் எப்படியாவது கவர்மெண்ட் வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற ஆசையும் இலட்சியமும் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பலரும் கடினமாக படித்து வருகின்றனர். அவர்களுக்கு உபயோகப்படும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி ஒன்றிய அரசின் 8000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய அரசு துறைகளில் சுமார் 8000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு பணியாளர்களுக்கான தேர்வு எழுத பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.
விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் கட்டணத்தை ஜனவரி 25-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கி வரைவோலையாக தேர்வு கணக்கு கட்டணத் தொகையை ஜனவரி 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி வழியாக ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஒன்றிய செயலகப் பணிகள், இந்திய கணக்கு தணிக்கை துறை, உணவு பிரிவு உள்ளிட்ட துறைகளில் பணியாளர் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.