Connect with us

நாளை முதல் தமிழகத்தில் 80 ஆயிரம் போலீசார்! சென்னையில் 7 ஆயிரம் போலீசார் தீவிரம்!

News

நாளை முதல் தமிழகத்தில் 80 ஆயிரம் போலீசார்! சென்னையில் 7 ஆயிரம் போலீசார் தீவிரம்!

f9b234625a1dae32e77217e647ec90db

தமிழகத்தில் சில தினங்களாக ஊரடங்கு என்ற பேச்சு வார்த்தை அதிகமாக காணப்படுகிறது. மேலும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இந்த ஊரடங்கு என்று பேச்சுவார்த்தையானது நடைமுறை சொல்லாக மாறியது மக்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. காரணம் என்னவெனில் தற்போது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இரண்டாவது அலையாக எழுந்துள்ளது ஆட்கொல்லி நோயான கொரோனா.இதற்காக பல மாநில அரசுகள் பல்வேறு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.f7e860107156c1cc93cbda2eb8649f81-2

ஒரு சில மாநிலங்களில் கொரோனா நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் அதிகமாக உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால் ஒரு சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். மேலும் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் ஒருவார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் நாளைய தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது .முன்னதாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிட தக்கது .இந்நிலையில் நாளையதினம் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளதால் அதற்காக பாதுகாப்பு பணிகள் தமிழகத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழகத்தில் நாளை பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுவர் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை மக்கள் முழுமையாக கடைபிடிக்க டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு மீறி வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி எச்சரித்துள்ளார். மேலும் தமிழகம் மட்டுமின்றி சென்னையில் நாளை முழு ஊரடங்கு ஒட்டி பாதுகாப்பு பணியில்  7000 போலீசார் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top