மதுரையில் 80% பேருந்துகள்; சென்னையில் 60% பேருந்துகள்! மக்கள் குஷியோ குஷி;
நேற்றும் இன்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை .
அதிலும் வழக்கம்போல் இயக்கப்படும் பேருந்துகளை விட சற்று குறைவாகவே பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய தினமும் போராட்டம், இருப்பினும் பல இடங்களில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மதுரையில் 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தொமுச அறிவித்துள்ளது.
சென்னையில் பொதுமக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தொமுச பொருளாளர் அறிவித்துள்ளார். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள், 60% தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர் என்றும் தொமுச பொருளாளர் அறிவித்துள்ளார்.
