Connect with us

18 லட்சத்துக்கு 80 லட்சம் கொடுத்தும் தீராத கடன்!! பெண் தற்கொலை முயற்சி;

poition

தமிழகம்

18 லட்சத்துக்கு 80 லட்சம் கொடுத்தும் தீராத கடன்!! பெண் தற்கொலை முயற்சி;

ஒவ்வொரு தினமும் நம் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையானது மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இவை பல இடங்களில் தற்கொலை செய்வதன் மூலமாக வெளிச்சம் ஆகிறது இந்த சம்பவம் அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளிப்பதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாக்யராஜ் என்பவரின் மனைவி அமுதா கந்துவட்டி கொடுமையால் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தொழிலுக்காக ரூபாய் 18 லட்சம் பெற்று அதற்காக வட்டியாக 80 லட்சம் பணம் மற்றும் 50 சவரன் நகையையும் கொடுத்துள்ளார். அமுதா கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு மெரடியதால் விஷம் குடித்து அமுதா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமுதா கண்டுபிடி கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். கந்துவட்டி கொடுமையால் அமுதா தற்கொலைக்கு முயற்சித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top