விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் முதல் படத்துக்கே இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என நினைத்தாராம்.
முடியாமல் போகவே அதை கைவிட்டிருக்கிறார். நீண்ட நாட்களாக படம் இல்லாத இவர் முதல் முறையாக படம் தயாரித்து இயக்குகிறார்.
இவரின் முதல் படத்துக்கு இளையராஜா இசையமைக்க முடியாமல் போனது ஒரு பக்கம் இருந்தாலும், முதல் தயாரிப்புக்கு இளையராஜா இசையமைப்பது இவருக்கு மிக பெருமையாக இருக்கிறதாம்.
இளையராஜா சார் இசை ‘படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக ‘இருக்கும். ஒரு இசை மாமேதையுடன் இந்த புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை ” என்று கூறிய சுசி கணேசன் இன்று மும்பையில் இருந்து வந்து அவருக்கான பண மரியாதை செய்து இன்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்.
படத்தின் பெயர் வஞ்சம் தீர்த்தாயடா. 80களில் நடந்த உண்மைக்கதையின் அடிப்படையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது.