8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்! மோடிக்கு ஸ்டாலின் கடிதம்;

இந்தியாவின் வட முனையான ஜம்மு காஷ்மீர் தொடங்கி தென் முனையான கன்னியாகுமரி வரை நீண்ட தேசிய நெடுஞ்சாலை காணப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தொடர்பு உள்ளதாக காணப்படுகிறது.

ஸ்டாலின்

இந்தநிலையில் நெடுஞ்சாலை பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

8 மாநில நெடுஞ்சாலைகளையும் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை நினைவுபடுத்தும் வண்ணமாக 8 சாலைகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் தமிழக முதல்வர் மு. .க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார்.

இந்த எட்டு மாநில நெடுஞ்சாலைகளும் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா மையங்கள், புனித தலங்களை இணைப்பவை ஆகும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்டுள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வசதியாக அவற்றை தேசிய  நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என்று மோடிக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment