எட்டு பேர் கொண்ட கும்பல் ஒரே வருடத்தில் சுமார் 700 பெண்களை ஏமாற்றி உள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து அந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நொய்டாவை சேர்ந்த எட்டு பேர் கும்பா கொண்ட கும்பலை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 6 வெளிநாட்டவர் என்றும் இரண்டு இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆறு வெளிநாட்டினர்களில் இருவருக்கு மட்டுமே பாஸ்போர்ட் விசா உள்ளதாகவும் மற்ற ற்ற நான்கு பேருக்கு எந்த வித ஆவணங்களும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் சமூக வலைதளங்களில் பெண்களுடன் பழகி அவர்களிடம் ஏமாற்றி பொருள் பறிப்பதையே கடந்த ஒரு ஆண்டாக தொழிலாக வைத்துள்ளனர். இந்த கும்பலில் உள்ள ஒருவர் தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும் கடற்படை அதிகாரி என்றும் கூறியுள்ளார். பிறகு அந்த பெண்ணுடன் சில நாட்கள் நட்பாக பழகிய நிலையில் சில பரிசுகளை அனுப்புவதாகவும் அவர் அந்த பரிசின் பார்சல் புகைப்படத்தையும் காண்பித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு சுங்க அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் உங்களுக்கு அமெரிக்காவிலிருந்து பரிசு பொருள் வந்திருப்பதாகவும் அந்த பரிசை விடுவிக்க வேண்டும் என்றால் இரண்டரை லட்சம் ரூபாய் சுங்கவரி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அந்த பணத்தை சுங்கவரியாக செலுத்திய பின்னர் இருவரும் தொடர்பிலிருந்து விடுபட்டனர்.
இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டு விட்வோம் என்பதை உணர்ந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்ததில் இந்த எட்டு பேர் கொண்ட கும்பலை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது கடந்த ஒரு ஆண்டில் சுமார் 700 பெண்களை இதுவரை ஏமாற்றி உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து வழங்குதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவுகள் 66 மற்றும் 66D (தொடர்பு சாதனங்கள் அல்லது கணினிகளைப் பயன்படுத்தி ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் டேனியல் ஜான் (கானா), கால்வின் ஒகாஃபோர் குய்ஸ் (நைஜீரியா), உசென்னா எக்பு (நைஜீரியா), ஜோனாஸ் டெக்கா (கானா), ஹிபிப் ஃபோபானா (ஐவரி கோஸ்ட்), இக்ஸா சாகிர் (நைஜீரியா), மற்றும் ஓயோமா லிசா டொமெனிக் (நைஜீரியா) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ) மேலும், சிக்கிமில் உள்ள காங்டாக்கை சேர்ந்த ராதிகா சேத்ரி என்ற இந்திய பெண் ஒரு கும்பல் உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, சேத்ரி சுங்கத் துறையின் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டார், ஏனெனில் அவர் ஹிந்தி பேசி பலரை ஏமாற்ற கும்பலுக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் இந்த கும்பலிடம் இருந்து 31 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தொலைபேசிகளில் 600 முதல் 700 பெண்களுடன் தொடர்பு விவரங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கும்பல் இந்த பெண்களிடம் மொத்தம் ரூ.7 கோடியை ஏமாற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.