உத்திர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து ஏழு மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மதுரா ரயில் நிலையில் ஏழு மாத குழந்தையை அந்த வழியாக வந்த ஒருவர் அக்கம் பக்கம் நோட்டமிட்டு ஏழு மாத குழந்தை தூக்கி செல்லப்பட்டார். இதனிடையே சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சூழலில் ஏழு மாத குழந்தையை கடத்தல் தொடர்பாக பா.ஜ.க பெண் தலைவர், அவரின் கணவர் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது.
அதே சமயம் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இத்தகைய சம்பவம் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.