Connect with us

தீ விபத்து 8 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

fire

செய்திகள்

தீ விபத்து 8 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

கடந்த சில நாட்களாகவே தீ விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதுலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் ஹைதராபாத் அருகே இருக்கும் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சென்னை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு திடீரென எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் தீயானது அங்கு தங்கியிருக்கும் விடுதிகளுக்கும் பரவியது. இதனிடையே சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

அதே சமயம் தீ விபத்தினால் வந்த புகையினால் மூச்சு திணறி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top