மயிலாடு துறையில் அரசு பேருந்து மோதியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்வரன், புவனேஷ்வரி என்ற தம்பதியினருக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புவனேஷ்வரி தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தஞ்சாவூர் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதால், நிலைதடுமாறி புவனேஷ்வரி மற்றும் குழந்தை கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது 8 மாத பெண் குழந்தை மீது அரசு பேருந்து ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.