Connect with us

பிரதமர் பிறந்தநாள்: 8 சிறுத்தைகள் பூங்காவில் விடுவித்தார்!!

modi1

செய்திகள்

பிரதமர் பிறந்தநாள்: 8 சிறுத்தைகள் பூங்காவில் விடுவித்தார்!!

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி , மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

இந்தியாவில் அழிந்துவிட்டதாக கருதப்படும் விலங்குகளை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினத்தின் நமீபியாவைச் சேர்ந்த 8 சிறுத்தைகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி 8 சிறுத்தைகள் தற்போது விடுவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுத்தைகளில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதோடு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top