செஸ் ஒலிம்பியாட்: துவக்க நிறைவு விழாவிற்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!

இந்தியாவிற்கே பெருமை அளிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதன்படி உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக ரஷ்யாவில் திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு போர் காரணமாக ஒலிம்பியாட் சென்னைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி  கலை நிகழ்ச்சிக்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க நிறைவு விழாவிற்காக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 92.13 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த மேலும் 8 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு.

செஸ் ஒலிம்பியாட் நடத்த கூடுதலாக 15 கோடி தர அரசிடம் கோரிக்கை வைக்கிறது இந்திய  கூட்டமைப்பு. செஸ் வீரர்கள் தங்குவதற்காக சென்னை மாமல்லபுரத்தில் 31 ஹோட்டல்களில் அனைத்து அறைகளும் முன் பதிவாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.