Connect with us

ஜனாதிபதி தேர்தலில் 115 வேட்பு மனுக்கள் தாக்கல்! 8 பேர் மட்டுமே போட்டி!!

Presidents of India Collage

செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் 115 வேட்பு மனுக்கள் தாக்கல்! 8 பேர் மட்டுமே போட்டி!!

நம் இந்தியாவின் தேர்தல் களம் தற்போது மிகவும் சூடு பிடித்ததாக காணப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவின் மூத்த குடிமகன் என்று அழைக்கப்படுகின்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.

அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றைய முன் தினம் வரை நடைபெற்றது. மேலும் நேற்றைய தினம் மனுக்கள் மீதான பரிசீலனையும் நடைபெற்றதாக தெரிகிறது. இதில் தற்போது 8 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியிட மொத்தம் 115 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் திரௌபதி முர்மு, எஸ்வந்த் சின்காவின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

மேலும் 28 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நேரத்திலேயே நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 87 மனுக்களில் 79 வேட்பு மனுக்கள் இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் நடக்க இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எட்டு பேர் மட்டுமே போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top