Connect with us

“நீட் தேர்வில் மோசடி” மாணவி ,உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது!

News

“நீட் தேர்வில் மோசடி” மாணவி ,உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது!

44f3c6cd676635b08c04bb177262d362

தற்போது சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.  தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது. இதுகுறித்து நேற்றையதினம் சட்டப்பேரவையில் பல்வேறு விதமான விவாதங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இந்த நீட் தேர்வு நுழைவு மையத்தில் பல்வேறு விதமான சோதனை முறைகள் காணப்படும். ஆனாலும் இந்த நீட் தேர்வில் தற்போது மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.4545411dc8fbb3e31f3e0922f0687d80-1

அதன்படி இந்த நீட் தேர்வில் மோசடி செய்த மாணவி மற்றும் அவருக்கு உதவிய உறவினர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தானில் நீட் தேர்வில் மோசடி செய்த மாணவியும் அவருடைய உறவினர் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவி தினேஷ்வரி குமாரிக்கு தேர்வு மைய கண்காணிப்பாளர் ராம்சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பிலிருந்த முகேஷ் ஆகியோரும் உடந்தை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாளை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் வழியாக ஜெய்ப்பூரின் சித்திரக்கூட் பகுதியிலுள்ள இருவருக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஷிகாரில் சிலருக்கு அனுப்பி விடை பெற்று அவற்றை ராம் சிங்கிற்கு அனுப்பி அதன்மூலம் மாணவி சரியான விடைகளை எழுதி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top