வண்டலூரில் அடுத்தடுத்து பேரிழப்பு! ஒரே நாளில் 7 நெருப்புக்கோழிகள் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு காணப்படுகிறது. அதனால் சுற்றுலா தளங்கள்  திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிப்பிற்கு பின்னர் தற்போது பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.பெண் சிங்கம்

பூங்கா திறக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை இரண்டு நெருப்புக் கோழிகள் உயிரிழந்தன. இது தொடர்பாக மருத்துவர்கள் சோதனை நடத்தி வந்த நிலையில் நேற்றைய தினம் அடுத்தடுத்து ஏழு உயிர் நெருப்புக் கோழிகள் பராமரிக்கும் பகுதியில் உயிரிழந்ததால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

இதனால் நெருப்பு கோழிகளின் உயிரிழப்பு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் நெருப்புக் கோழிகள் பராமரிக்கும் இடம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.நெருப்பு கோழிகளுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த 22 வயது பரிதா பெண் சிங்கம் கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தது. மேலும் இந்த பெண் சிங்கமானது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment