12ம் வகுப்பு பொது தேர்வில் 77 சிறை கைதிகள் தேர்ச்சி !

மத்திய சிறைகளில் உள்ள 88 கைதிகள் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தனர், அவர்களில் 77 பேர் தேர்ச்சி பெற்றதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைத்துறையின் வேண்டுகோளின்படி அந்தந்த சிறைகளில் தேர்வு மையங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது.

சிறைத் துறையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, நான்கு பெண் கைதிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். திருச்சி மத்திய சிறையில் இருந்த 6 கைதிகளும் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வு அதிகபட்சமாக புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தேர்வெழுதினர். புழல் சிறையில் தேர்வெழுதிய 25 கைதிகளில் 21 பேரும், மதுரை மத்திய சிறையில் 22 கைதிகளும் தேர்வெழுதி 20 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு சிறை கைதிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.5 சதவீதமாக உள்ளது.

சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் இடங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களில் கல்வியை வழங்குவது முதன்மையான நடவடிக்கையாகும். கைதிகள் கல்வியறிவற்றவர்களாக இருப்பதால் பல கல்வித் திட்டங்கள் சிறைச்சாலைகளில் தொடங்கப்பட்டுள்ளன.

நடந்தால் மின்சாரம் கொடுக்கும் ஷூ.. 9ஆம் வகுப்பு மாணவரின் சாதனை கண்டுபிடிப்பு..!

அவர்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  அவர்களின் விடுதலையின் போது வாழ்வாதாரமான வேலைவாய்ப்பை நோக்கி,” என அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.