76 வயது தமிழ் நடிகை காலமானார்: ரசிகர்கள் சோகம்

02026c0160e871e2053038128b98187c-1

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி சற்றுமுன் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர் 
தமிழ் திரையுலகில் கடந்த 70 மற்றும் 80 களில் வெளியான பல வெற்றித் திரைப்படங்களில் நடிகை ஜெயந்தி நடித்துள்ளார். பாமா விஜயம், இரு கோடுகள், எதிர்நீச்சல், புன்னகை, நூற்றுக்கு நூறு, வெள்ளி விழா, எல்லோரும் நல்லவரே உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் 

இந்த நிலையில் நடிகை ஜெயந்தி பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 76 வயதான நடிகை ஜெயந்தியின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று திரையுலகினர் கூறிவருகின்றனர். ஜெயந்தியின் இறுதிச்சடங்கு இன்று பெங்களூரில் நடைபெறும் என்று கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.