ரூ.7500 கோடியில் தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு! ரூ.2,000 கோடியில் கடல் நீரை நன்னீராக்கும் ஆலை!!
தமிழகத்தில் முத்து நகரமாக காணப்படுகிறது தூத்துக்குடி மாநகரம். தூத்துக்குடி மாநகரில் துறைமுகம் உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் ரூபாய் 7,500 கோடியில் மேம்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி. துறைமுகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதனை தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
பன்னாட்டு சரக்கு கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து சென்று சரக்குகளை கையாளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். தூத்துக்குடி துறைமுக வாயிலில் இருபுறமும் இரண்டு புதிய சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளன என்றும் கூறினார்.
வ.உ.சி. துறைமுக வளாகத்தில் பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதியாக 16 மீட்டர் ஆழப்படுத்தபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. வ.உ.சி துறைமுகம் சார்பில் தினமும் 50 லட்சம் லிட்டர் கடல் நீரை நன்னீராக்கும் ஆலை ரூபாய் 2,000 கோடியில் செயல்படுத்த திட்டம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
சூரிய சக்தி உற்பத்தி செய்யும் வகையில் ரூபாய் 22 கோடியில் சோலார் பேனல்களை நிறுவவும் துறைமுக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. பசுமை சக்தி திட்டத்தின் கீழ் ரூ.500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 20 கோடியில் காற்றாலை மின் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கையை 3லிருந்து 6 உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
