மதுராந்தகம்:தொடர் மழையால் 262 ஏரிகளில் 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியவுடன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் ,ஏரிகள், குளங்கள் அதிகளவில் நிரம்பி காணப்படுகின்றன.

ஏரிகள்

அவை பெரும்பாலும் திறக்கப்பட்டு அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.குறிப்பாக இன்றைய தினம் காலையில் மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்தும், கொள்ளிடம் அணை குறித்தும் தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டே உள்ளன.

இந்த நிலையில் மதுராந்தகம் பகுதியில் உள்ள 75 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் காணப்படுகிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 75 ஏரிகள் தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

மதுராந்தகம்  பகுதியில் மொத்தம்  262 ஏரிகள் உள்ளன. மொத்தம் உள்ள 262 ஏரிகளில் தற்போது எழுபத்தைந்து ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மதுராந்தகத்தில் உள்ள 262 ஏரிகளில் 75%த்தை 94 ஏரிகள் எட்டியுள்ளன என்றும் கூறப்படுகிறது.மீதமுள்ள 93 ஏரிகள் 50 சதவீதமும் எட்டியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print