Tamil Nadu
75% கட்டணம் மட்டுமே: அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினர்கள் வேலை இன்றி வருமானம் இன்றி இருந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரி கட்டணத்தை முழுவதுமாக செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகள் 75 சதவீத கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்
மேலும் இன்று முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் பதினோராம் வகுப்பு சேர்வதற்கு என்ன தகுதியோ, அந்த தகுதி தான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
