எக்ஸ்ட்ரா ஃபீஸ் வாங்ககூடாது! 7.5% உள் ஒதுக்கீடு- கட்டணம் செலுத்த ₹74.28 கோடி ஒதுக்கீடு!

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய பட்டப்படிப்பு என்றால் அதனை பொறியியல் படிப்பு என்றே கூறலாம். காலம் செல்ல செல்ல பொறியியல் படிப்பின் மதிப்பும் நம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது.

இன்ஜினியரிங் கலந்தாய்வு

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஒருசில பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் இல்லாமலும் காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கலந்தாய்வில் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் விருப்பம் தெரிவிக்காதது தெரிய வந்தது.

இந்த நிலையில் பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு-ல் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த 74.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி பொறியியல் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இத்தகைய கட்டணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7876 மாணவர்களுக்கு கல்வி,விடுதி, போக்குவரத்து கட்டணமாக செலுத்த ரூபாய் 74.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு அளிக்கும் கட்டணத்தை தவிர வேறு எந்த கட்டணத்தையும் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என்றும் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment