Connect with us

72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாதது ஏன்? வல்லுனர்கள் கருத்து

கலந்தாய்வு

Tamil Nadu

72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாதது ஏன்? வல்லுனர்கள் கருத்து

72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாதது ஏன்? வல்லுனர்கள் கருத்து

தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் 61 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடந்தது என்பதும் இந்த கலந்தாய்வு 9ஆம் தேதி முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்ட நிலையில் 20 ஆயிரத்து 363 மாணவர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் இரண்டாம் சுற்றுகளின் முடிவில் 30 ஆயிரத்து 511 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இருப்பினும் இன்னும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட சுற்றுகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க இருப்பதாகவும் இந்த கலந்தாய்வின் போது சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் கலந்தாய்வின் முடிவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப் படாமல் இருக்க வாய்ப்பிருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். முதலிரண்டு கலந்தாய்வின்போது 72 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்றும் இதற்கு அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கும் கல்லூரிகள் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top