
செய்திகள்
700 ஆண்டுகள் வயதான பப்பரப்புளி மரம்! தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா?
700 ஆண்டுகள் வயதான பப்பரப்புளி மரம் ஒன்று ராஜபாளையத்தில் உள்ள சின்மயா வித்யாலயா எனும் ஒரு பள்ளி வளாகத்தில் இருக்கிறது. அதனை கற்பகதரு, பொந்தாம் புளி,யானை புளிமரம் என அவர்கள் அழைக்கிறார்கள். பஞ்சகாலத்தில் யானைகள் அதனது தண்டை உடைத்து உள்ளே உள்ள தண்ணீரை அருந்துமாம்.
இந்த மரம் சராசரியாக 2500 ஆண்டுகளும் அதிகபட்சமாக 5000 ஆண்டுகளும் வாழக்கூடியது. இது ஆப்பரிக்கா மற்றும் ஆஸத்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது. பல வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு வாணிபம் செய்ய வந்த அரேபியர்களால் (வட ஆப்பரிக்க மற்றும் ஏமன்) தென் இந்திய கிழக்கு கடற்கரையோரமும் போர்ச்சுகீசியர்களால் வட மேற்கு கடற்கரையோரமும் நடப்பட்டிருக்கிறதாம். ஏன்?
1. இந்த மரத்தின் பழம் அதிக வைட்டமின் சி சத்துக் கொண்டது. கடல் பயணத்தின் போது ஏற்படும் Scurvy எனும் நோயிற்கு மருந்தாக இருந்ததால் இருக்கலாம்
2. தாங்கள் வந்து சென்ற இடங்களை அடுத்து வருபவர்களுக்கு அடையாளப்படுத்துவதற்காக இருக்கலாம்
3. இதன் இலைகளை அரேபியர்கள் கொண்டு வந்த குதிரைகளுக்கு உணவாக கொடுத்திருக்கலாம்
இந்த மரத்தின் சுற்றளவு 30லிருந்து 50 அடி வரை விரியும். ஐம்பது பேர் இதனை சுற்றி நிற்கலாம். சுற்றளவை வைத்து வயதை கணிக்கலாம். ஆயிரம் வருடங்கள் கழித்து தண்டினுள்ளே துளை விழுந்துவிடுமாம். அதனுள் பத்து பேர் வரை தங்கலாமாம். இதனை குஜராத்தில் chor Aamla திருடர்களின் புளி என்று அழைக்கிறார்கள். அங்குள்ள திருடர்கள் ஒளிந்துக் கொள்வார்களாம்.
ஒரு வழியா அமீரிடம் காதலை சொன்ன பாவனி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
