தமிழகத்தில் 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!: அரசாணை வெளியீடு;

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினந்தோறும் புதுப்புது அரசாணைகளை வெளியிட்டு வருகிறார். அரசாணைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் ஆச்சரிய படத்தக்க வகையில் அமைந்து வருகிறது.

ஸ்டாலின்

இந்த நிலையில் தமிழகத்தில் 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு இத்தகைய அரசாணையை வெளியிட்டுள்ளது. அவர்கள் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏனென்றால் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கப்படுவார் என்று சட்டப்பேரவையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனால் தமிழகத்தில் உள்ள  அனைத்து சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற 700 ஆயுள் தண்டனை கைதிகள் அவர்கள் நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் காரணம் அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment