Connect with us

திருமணத்துக்காக வைத்திருந்த 70-சவரன் நகை கொள்ளை!! திருச்சியில் பயங்கரம்!!

robbed

தமிழகம்

திருமணத்துக்காக வைத்திருந்த 70-சவரன் நகை கொள்ளை!! திருச்சியில் பயங்கரம்!!

திருச்சியில் திருமண வீட்டிற்குள் புகுந்து 1 லட்சம் பணம், 70 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்மலை ரயில்வே அலுவலர் நாகலட்சுமி என்பவர் தங்கை மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது வீட்டை பூட்டி விட்டு கடை தெருவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனிடையே திருமணத்திற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகை கொள்ளை போனதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் படி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top