
தமிழகம்
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் விவசாயிகளுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்!!
திமுக அரசு ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆகிய நிலைகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக தமிழக முதல்வர் 7 புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
இந்நிலையில் உழவர்களின் வருமானத்திற்காக விலைப்பொருட்களை பேருந்துகளில் இலவசமாக எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
இதனிடையே தற்போது செயல்பட்டு வரும் வேளாண் துறையை வேளாண் துறை மற்றும் உழவர் துறை என பெயரை மாற்றியும் வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை கொண்டுவந்ததாக கூறினார்.
குறுவை சாகுபடிக்கு மே 24-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதாகவும் கூறினார். தமிழகத்திற்காக 7 தொலைநோக்கு ஒன்றாக மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி என்ற திட்டத்தின் மூலம் 12, 527 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்துவதாக அவர் கூறினார்.
2021-22 ஆண்டுகளில் 1997, கிராம பஞ்சாயத்துகளில் 220 கோடியில் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களில் சாகுபடி செய்த, கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், சிறு குறு தொழில்களுக்கு சான்று வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் அதிகளவு பயிர் கடன் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
