தேர்வு எழுதிய மாணவர்களில் 90% பேர் தோல்வி! போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது!!

அண்மைக் காலமாக நம் தமிழகத்தில் மாணவர்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் தேர்வு கிடையாது என்று அறிவித்தபோது மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் என பல மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோயம்புத்தூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அறை அருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். வேளாண் பல்கலை கழகத்தில் அரியர் தேர்வு எழுதிய மாணவர்களில் 90% பேர் தோல்வி என முடிவு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஏழு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

90 சதவீத மாணவர்கள் தோல்வி என முடிவை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் என இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையிலிருந்து பல்கலைக்கழக துணைவேந்தர் அறை அருகே அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment