ஓடும் ரயில் பட்டாக்கத்தியுடன் கெத்து காட்டிய புள்ளிங்கோ!! கொத்தாக தூங்கிய போலீஸ்!!

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்த 7 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் பாதையில், கையில் பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக மாணவர்கள் நடந்துகொண்டதால், திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 2 பேரை கைது செய்தனர்.

இந்த சூழலில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் தனுஷ் என்ற மாணவர் 17-வயது என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் இத்தகைய செயல் ரூட் தல விவகாரமாக இருக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.