தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக காணப்படுகிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்த எதிர்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அலுவலகங்கள், வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வந்தன.
அதில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு பலரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.
அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் அவர் மீது புதிதுபுதிதாக புகார் வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ராஜேந்திர பாலாஜி மீதான 7 புதிய புகார்கள் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அதிமுக நிர்வாகி மூலம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்த 7 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் நிச்சயமாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 7 வழக்குகள் அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறையின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.