அடுத்த சில மணி நேரம்… 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

தமிழகத்தில் கோவை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் தாக்கத்தின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இனி புகைப்பிடிக்கக் கூடாது!! நியூசிலாந்தில் சட்டம் நிறைவேற்றம்..!!

இந்நிலையில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் விருதுநகர், திண்டுக்கல், கோவை போன்ற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!!

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.