மக்களே உஷார்!! 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!!

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யுன் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல்‌, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை மற்றும்‌ தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

வருகின்ற 21-ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ எனவும் நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment