
தமிழகம்
7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!!
கடந்த ஓரிரு நாட்களாக நம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதாக காணப்படுகிறது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மாலை வேளையில் மிதமான மழை பெய்து வந்தன. இந்த நிலையில் குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.
அதன்படி தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது. இதனால் இந்த ஏழு மாவட்டங்களில் வாழும் மக்கள் மீது நம்பிக்கை உள்ளனர்.
