தொடரும் பெரும் சிரமம்: 7 மாவட்டங்களில் கனமழை! 11 மாவட்டங்களில் மிதமான மழை!!

கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நம் தமிழகத்தில் தற்போது வரை நீடித்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மிகுந்த பாதிப்பினை பெற்றுள்ளது.

மழை

குறிப்பாக வட தமிழகம் பெரும் சிரமத்திற்குள் காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம்

இந்த நிலையில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

ராணிப்பேட்டை,வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இந்த மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment