முன்னாள் முதல்வரின் கூட்டத்தில் நெரிசலால் 7 பேர் பலி.. சொந்த பணத்தில் இழப்பீடு தருவதாக வாக்குறுதி!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 7 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது சொந்த பணத்தில் நிவாரணம் வழங்க இருப்பதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சி இப்போது முதலே தனது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

chandrababu naiduஅதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் பொதுக்கூட்டங்களை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நடந்து வரும் நிலையில் நேற்று நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்தக்கூர் என்ற பகுதியில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.

இதில் ஏராளமான பொதுமக்கள், தெலுங்குதேச தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் தனது சொந்தப் பணத்தில் வழங்குவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களை நேரில் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய சந்திரபாபு நாயுடு, சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.