குன்னூரில் கோர சம்பவம்: நெருங்க முடியாத அளவிற்கு அணையா நெருப்பு; 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு!

நம் இந்தியாவில் தினந்தோறும் விபத்துகள் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இவற்றில் பல விபத்துகள் ஓட்டுனரின் கவனக் குறைவால் ஏற்படுகிறது. ஒரு சில விபத்துகள் வாகனத்தின் தொழில்நுட்ப கோளாறால் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை குன்னூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த விமானம் பெட்ரோலால் இயங்க கூடியது என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிகிறது.

தீப்பிடித்து எரிவதால் ஹெலிகாப்டர் அருகே சென்று மீட்பு பணி மேற்கொள்ள முடியாத அளவிற்கு சூழ்நிலை அமைந்துள்ளது. கோவையில் இருந்து 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூருக்கு விரைந்து செல்கிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு விரைந்துள்ளது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment