7.5% இடஒதுக்கீடு… மறு ஆய்வு செய்யலாம்… அரசுக்கு ஐகோர்ட் யோசனை!!

தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருபவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவ சீட் கிடைக்காத காரணத்தினால் கல்வி நிறுவனத்தில் துணை மருத்துவராக படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி இரண்டு முறை நீட்தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனிடையே அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தும், 7.5% இடஒதுக்கீடு கீழ் மாணவிக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 7.5% இடஒதுக்கீடு தனியார் பள்ளிகளுக்கும் கிடைத்திருந்தால் தனக்கு சீட் கிடைத்திருக்கும் என கூறினார்.

தூக்குல போடாமல் ரயில்ல தள்ளி விட்டுங்க – விஜய் ஆண்டனி ஆவேசம்!!

இதன்காரணமாக தமிழக அரசிடம் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை அமர்வு அழைப்பு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மாணவி மரணம்: சதீஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

அதே சமயம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் வசதியானவர்கள் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம் என கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment