ஹிட் அடித்த இளையராஜாவின் அந்நிய மொழி பாடல்கள்- பாகம் 7

இளையராஜாவின் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் பற்றி பார்த்து வருகிறோம் . இளையராஜா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்தார் எல்லா மொழியிலும் அவர் போட்ட பாடல்கள் ஹிட் தான்.

b7017513a89c0c53e544dfcad8bd48f9-1

ஹிந்தி இயக்குனர் பால்கிக்கு இளையராஜா என்றால் உயிர் அவரின் படங்களுக்கு இளையராஜாவை மட்டுமே தேர்வு செய்வார். சில வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய திரைப்படம் சீனி கம். அமிதாப், மற்றும் தபு நடித்திருந்தனர்.

இந்த படம் கடந்த 2007ல் வந்தது. இப்படத்திற்கு இசையமைத்த இளையராஜாவிடம் இயக்குனர் பால்கி , இளையராஜா இசையமைத்த பழைய தமிழ் திரைப்படங்களின் ஹிட் பாடல்களில் சாயலிலேயே ஹிந்திக்காக பாடல்களை வாங்கி இருந்தார் இயக்குனர் பால்கி.

பல வருடங்களுக்கு முன் வந்த விழியிலே மணி விழியிலே என்ற பாடலை ஜானே தோனா என்றும், மன்றம் வந்த தென்றலுக்கு பாட்லை சீனி கம்கே சீனி கம்கே என்றும், குழலூதும் கண்ணனுக்கு பாடலை பாட்டெய்ன் ஹவா என்ற பெயரிலும் இசைத்திருந்தார். இது தவிர இன்னும் சில பாடல்களும் இப்படத்தில் ஹிட் ஆகின.

வித்தியாசமான இக்கதைக்களத்திற்கு இளையராஜாவின் பாடல்கள் இனிமை சேர்த்தன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.