Connect with us

7ம் தேதி திறக்கப்படும் டாஸ்மாக்- சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

Tamil Nadu

7ம் தேதி திறக்கப்படும் டாஸ்மாக்- சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

வரும் 7ம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகளை பார்க்க முடிகிறது.

f52ca034620dd0c6a4019a4f262818ee

இன்னும் ஊரடங்கு முழுமையாக முடிவடையாத நிலையில், சென்னை போன்ற நகரங்களில் கொரோனா மிக வேகமாக அதிரடியாக பரவி வரும் இவ்வேளையில் டாஸ்மாக் திறக்கப்படும் என அரசு அறிவித்திருப்பது, பல ஏழை மக்களிடம் அதிர்ச்சியை அதிகப்படுத்தி உள்ளது.

சாப்பாடே இல்லாவிட்டாலும் இருக்கிறதை சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா இருந்தோம் இப்போ இருக்கிற அசாதாரண சூழ்நிலையில குடிக்கு அடிமையானவர் எதையாவது அடகு வைத்து குடிக்கிறேன் என வீட்டில் உள்ள பொருட்களை திருடி அடகு வைத்து குடிப்பதும், வீட்டில் மிச்சம் மீதி வைத்துள்ள பணத்தை குடிக்காக செலவழிப்பதும் அதிகரித்து விடும் இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் மீண்டும் ஆரம்பமாகி விடும். கொரோனா போன்ற கொடிய சூழலில் இது போல திறந்து விடுவது வீட்டிலும் நாட்டிலும் பலருக்கு மன அமைதியை பாதிக்க கூடிய விசயமாக போய் விடும் என்பது கருத்தாக உள்ளது.

இன்னும் சிலரின் கருத்து என்னவென்றால் யாரிடமும் காசு இல்லாத இந்த சூழலில் இப்படி திறந்து விட்டால், குடிக்கு அடிமையான நோயாளிகள் அடுத்தவரிடம் வழிப்பறி செய்து கூட குடிப்பர். இதனால் குற்றங்கள் அதிகரிக்கும் என்பது ஒரு பார்வையாக உள்ளது.

அவசியமில்லாத உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மதுபான கடையே திறக்கும்போது வழிபாட்டுத்தலங்களை திறக்கவும், வேன் டாக்ஸிகள் சராசரியாக ஓட வைக்கவும், சலூன் கடை தொழிலாளர்கள் போன்றோரையும் திறக்க வைத்தால் என்ன என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top