
செய்திகள்
மோடி ஆட்சியில் ரூபாய் 6 லட்சம் கோடி வங்கி மோசடி-காங்.எம்பி;
கடந்த சில நாட்களாக மோசடி மன்னர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக நம் நாட்டில் காணப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி மோடி ஆட்சியில் தான் மோசடி அதிகமாக நடந்துள்ளதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி பாஜக ஆட்சியில் ரூபாய் 6 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளிலிருந்து கடன் பெற்று மோசடி செய்துள்ளது என்று காங்கிரஸ் எம்பி கார்கே கூறியுள்ளார். விஜய் மல்லையா ரூபாய் 9 ஆயிரம் கோடியையும், நிரவ் மோடி, சோக்சி இருவரும் ரூபாய் 14 ஆயிரம் கோடியும் வங்கி கடன் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.
ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூபாய் 23 ஆயிரம் கோடியும், டிஎச்எப்எல் நிறுவனம் ரூபாய் 35 ஆயிரம் கோடியும் கடன் பெற்றுள்ளனர் என்றும் கூறினார். டிஎச்எப்எல் நிறுவனம் கொள்ளையடித்த பணத்தில் ரூபாய் 27 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறது என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
