67வது திரைப்பட விருது:சிறந்த ஆக்டர், சிறந்த திரைப்படம் விருதுகளை அடித்த அசுரன்!

இன்றைய தினம் திரைப்பட விருது வழங்கும் விழா தொடங்குகிறது. 67வது திரைப்பட விருது வழங்கும் விழாவானது டெல்லி விஞ்ஞான் பவனில் தொடங்கியது. தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் வெங்கைய நாயுடு.திரைப்பட விருது

அதில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்க உள்ளார் வெங்கைய நாயுடு. திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர் தமிழகத்தை சேர்ந்த முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் விருது பெறுபவர்களுக்கு ஒன்றிய இணை அமைச்சர் முருகன் வாழ்த்து தெரிவிக்கிறார். அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெறுகிறார். சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் பெறுகிறது.

இதனால் அசுரன் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்படுகிறது. விசுவாசம் படத்தில் கண்ணான கண்ணே  பாடலுக்கு இசையமைத்த சீமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. மேலும் இந்த விருது விழாவில் அனுராக் சிங் தாகூர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment