தமிழ்நாட்டில் 6695 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின!

வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் அணைகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது 6695 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏரிகள்

அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 14138 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 6695 ஏரிகள் 100% முழுவதாக நிறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 3277 பாசன ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன.

தமிழ்நாட்டில் 3180 ஒரு பாசன ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 1680 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. 1528 பணிகளில் முழு கொள்ளளவை 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீர் நிறைந்து உள்ளன என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

இதனால் தமிழகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது. இவை கோடை காலத்தில் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment